விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
காட்டுக்கு விறகு சேகரிக்கச் சென்ற பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பெரகல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், கடந்த 23ஆம் திகதி அருகில் உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற நிலையில், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று நேற்று(24) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல்
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, குடியிருப்பாளர்கள் மற்றும் உறவினர்கள், பொலிஸார உள்ளிட்டோர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் காணாமல் போன பெண்ணின் சடலம் ஒரு ஓடைக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், வட்டப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் கொலையாளி தொடர்பான எவ்வித தகவலும் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.