பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்.. நால்வர் தப்பியோட்டம் என தகவல்
சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்ல முயன்ற ஒரு குழுவை கைது செய்ய முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் தலஹேன சந்திக்கு அருகில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று பொலிஸ் அதிகாரிகள் முச்சக்கர வண்டியில் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தலஹேன கிராமத்திற்குள் செல்லும் வீதியின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை சோதனை செய்துள்ளனர்.
அந்த நேரத்தில், ஐந்து பேர் லொறியில் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
துப்பாக்கிச் சூடு..
பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை நெருங்கியதும், லொறியில் இருந்த ஒருவர் அதிகாரிகளைத் தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு பொலிஸ் அதிகாரி தனது கடமை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவர். இடது கையில் சுடப்பட்டு, மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லொறியில் இருந்த மற்ற நான்கு சந்தேக நபர்களும் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.