அரசாங்கத்தின் புதிய கல்வி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னிலை சோஷலிசக் கட்சி
நாட்டில் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என கன்னங்கரா கொண்டு வந்த இலவச கல்வி கொள்கையை மாற்றியமைக்க நினைப்பது தவறு என முன்னிலை சோஷலிசக் கட்சி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று(24.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
இலவச கல்வி முறைமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கல்வி கொள்கை தொடர்பாகவும், இந்த அரசாங்கமும் ஏனைய எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விடயங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.

இந்த கல்வி கொள்கை தொடர்பாக ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்திலும் அவருக்கு பின்னர் வந்த அவரின் தம்பி மற்றும் குடும்பம் என அனைவரும் ஆட்சியில் இருந்த காலத்திலும் தற்போது கொண்டுவரவுள்ள கல்வி கொள்கையை வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
உண்மையில் இந்த கல்வி கொள்கையை வகுத்து கொடுத்தது ஜ.எம்.எப். இந்த ஜ.எம்.எப் கொள்கைக்கு எதிராக ஏற்கனவே இன்று ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட எல்லோரும் இந்த கல்வி கொள்கை பிழையானது என எதிர்த்துள்ளனர்.
எதிர்ப்பு
அதன் பின்னர் கோட்டாபய ஜனாதிபதி ஆகியதுடன் அதே கொள்கையை கொண்டு வர முயற்சித்த போதும் அதற்கு எங்களுடன் சேர்ந்து இந்த தேசிய மக்கள் சக்தி எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் பின்னர், ரணில் ஆட்சியை பொறுப்பு எடுத்தவுடன், அவர் இல்லாமல் போன பின்னர் இன்று ஆட்சியை பொறுப்பெடுத்த இந்த தேசிய மக்கள் சக்தி இன்று 200 மில்லியன் பணத்துக்காக ஜ.எம்.எப் அதே கொள்கையை கொண்டு வரவுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கல்வி கொள்கை தொடர்பான திட்டங்கள் பற்றி பேசாமல் பிரதமர் ஹரிணி தொடர்பாக குறைவாக பேசியதாக எல்லோரும் அதை பற்றி பேசி வருகின்றனர்.

முதலாளித்துவ சிந்தனை உள்ளவர்கள் ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை ஒரு பெண்ணாண பிரதமர் பற்றி கதைப்பது பிழையானது. எனவே, கல்வி கொள்கையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக கதைக்க வேண்டும் இன்று கொண்டுவரவுள்ள புதிய கல்வி திட்டத்தில் 350 பாடசாலைகளுக்கு தொழில்நுட்பம் கற்பிக்க போகிறார்கள்.
ஆனால் 350 பாடசாலைகளுக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லை 500 பாடசாலைக்கு மின்சார வசதி இல்லை இதற்கு யார் பதில் சொல்வது?
350 பாடசாலைகள் மூட வேண்டிய நிலை
நாட்டில் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என கன்னங்கரா கல்வி கொள்கை கொண்டு வந்தார். ஆனால் தற்போது 100 பேருக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள பாடசாலைகளை மூட வேண்டும் என்கின்றனர்.
இதில் 350 பாடசாலைகளை மூட வேண்டும் இதனை மூடினால் எப்படி அந்த பிள்ளைகள் கல்வி கற்க முடியும். பிள்ளைகளின் ஆரம்ப கல்வியை கிடைக்காமல் செய்துவிட்டு குறிக்கப்பட்ட சிலருக்கு தொழிற்கல்வியை கொடுப்பதில் புண்ணியம் இல்லை.
எனவே இந்த கல்வி எல்லோருக்கும் கிடைப்பதற்கான வழிவகையை செய்ய வேண்டும். இந்த புதிய கல்வி கொள்கை வெளிவரும் போது எல்லோருடைய கையில் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும்.

இந்த நாட்டில் கொரோனா காலத்தில் ஸ்மார்ட்போன் ஊடாக கல்வியை கொண்டு வர முடியும் என கொண்டுவந்து, அது 68 வீதமானவர்களுக்கு மாத்திரம் கிடைத்தது 32 வீதமானவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்று தரம் 6ம் ஆண்டு தொடங்கும் இந்த கல்வி திட்டம் கொண்டுவர உள்ள இந்த கல்வி திட்டத்தில் ஒரு வீட்டில் 3 பிள்ளைகள் இருக்குமாயின், அம்மா 3 ஸ்மார்ட்போன் மற்றும் 3 கணனி வாங்க வேண்டும்.
அதே போன்று, பாடசாலை வகுப்பறை மாற்ற வேண்டும் இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன. கோட்டாபய பசளை பிரச்சனையை கொண்டுவந்து ஒரு வருடம் விவசாயத்தை நாசமாக்கியது போன்று ஜ.எம்.எப் இடம் பணம் வாங்குவதற்கு எங்களது பிள்ளைகளின் கல்வியை நாசமாக்க கூடாது. இதுபோன்று கல்வி கொள்கையில் அதிகமான பிரச்சனை இருக்கிறது அதனை தீர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.