யாழில் திடீரென குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த சுபாகரன் ரதினி (வயது 49) என்ற, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று (25.01.2026) காலை கழிப்பறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் மகன் அவரை தேடிச்சென்று பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள்... உக்ரைனுக்கு உதவ பிரித்தானியாவின் அதிரடி திட்டம் அம்பலம் News Lankasri