நெல் கையிருப்பை வெளியிட்டதால் ஏற்படப்போகும் பாதிப்பு: தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
பாதுகாப்பு நெல் கையிருப்பை வெளியிட நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படாத நிலையில் இவ்வாறான ஒரு செயற்பாடு பல பிரச்சினைகளை உருவாக்கலாம்.
சந்தையில் ஏற்படும் பாதிப்பு
2024/25 பெரும் போகத்திலும், 2025 சிறு போகத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபையால் நாற்பத்தொன்பதாயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டால் அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் சந்தையில் அரிசி பற்றாக்குறையைத் நிவர்த்திக்க அரசாங்கம் பாதுகாப்பான நெல் கையிருப்பை சேமித்து வைப்பது ஒரு பாரம்பரியமாகும்.
பாதுகாப்பான நெல் கையிருப்பை வெளியிட டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,பெரும் போகத்தில் நெல் விலையை சீர்குலைக்கும் ஒரு நுட்பமான தந்திரம் இது என்றும் குற்றம் சாட்டுகிறார்.

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், அரிசியை இறக்குமதி செய்து அரச வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
2025/26 பருவமழைக் காலத்தில் கிட்டத்தட்ட 800,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டதாகவும், 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தால் சுமார் 100,000 ஹெக்டேயர் நெல் அழிவடைந்துள்ளன.
அதனால் எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை குறையும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.