நாமலின் நுகேகொட கூட்டத்தில் கெமராவில் சிக்கிய இரகசிய காணொளிகள்! நாமலை ஜனாதிபதியாக்குவதில் தீவிரம்
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைவரும் எதிர்பார்த்திருந்த எதிர்கட்சிகளின், அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இடம்பெற்று முடிந்துள்ளது.
நுகேகொடையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்டிருந்த, குறித்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பேரணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான இந்த பேரணியில் அநுர ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினை அடுத்த ஜனாதிபதியாக மாற்றுவதற்கு தீவிர நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த பேரணியில் பல முக்கிய காணொளிகளும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam