ஐரோப்பிய நாடொன்றில் மனைவியை கொடூரமாக தாக்கிய இலங்கையருக்கு நேர்ந்த கதி
ஐரோப்பிய நாடான இத்தாலியில் மனைவைியை கொடூரமாக தாக்கிய இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சலேர்னோ நகரின் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
வீதியில் நடந்த கடுமையான வாக்குவாதம் மோதலாக மாறியமையினால் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குடும்ப வன்முறை
பொலிஸாரின் விசாரணைகளுக்கமைய, குறித்த நபர் தனது மனைவியை சுத்தியல் மற்றும் ஊன்றுகோலால் பலமுறை தாக்கியுள்ளார்.

அத்துதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றுள்ளார்.
வீதியில் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவத்தை அவதானித்த பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குடும்ப வன்முறைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் குறித்த இலங்கையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri