வங்காள விரிகுடாவில் பலவீனமடையும் காற்றழுத்த தாழ்வுநிலை! அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை
இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எச்சரிக்கை அறிவுறுத்தல்
இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்கம் காரணமாக, கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அத்துடன் மணிக்கு 50 - 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் கொந்தளிப்பாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam