மாபெரும் நுகேகொட பேரணி! நாமல் வெளியிட்ட பதிவு..
திறமையற்ற மற்றும் வஞ்சகமான மலைமா அரசாங்கத்திற்கு எதிராகப் போராட தைரியம் கொண்ட எனது நண்பர்களுக்கு நன்றி என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நுகேகொட பேரணி முடிந்த பின்னர் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
நுகேகொட பேரணி
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று(21)ஆரம்பமாகியது.
பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், களத்தில் அதிகளவான மக்கள் காத்திருக்கின்றனர்.
பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது எனினும் அவர் கலந்துக்கொள்ளவில்லை.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri