என்பிபி அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ச
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த அதே இரண்டு உளவுத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கைகளையும் மீண்டும் புறக்கணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், தெஹ்ரானில் இருந்து வந்த இரண்டு கொள்கலன்களில் போதைப்பொருள் இருப்பதாக முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தும், சுங்கத் திணைக்களம் அவற்றை விடுவிக்க அனுமதித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம்
உளவுப் பிரிவுகளுக்கு இந்த கொள்கலன்கள் பற்றி முன்னரே தகவல் கிடைத்திருந்தது என்றார்.
இதனை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த அதே உளவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த முறையும் முன்கூட்டியே தகவல் கிடைத்தது," என்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று கூறி சிலர் தண்டிக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார்.
இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நேர்ந்தது, மேலும் பொறுப்பாளர்களாக கண்டறியப்பட்ட இரண்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் இப்போது சிறையில் உள்ளனர்.
இருப்பினும், தாக்குதல் எச்சரிக்கைகளை புறக்கணித்த அதே இரண்டு உளவுத்துறை அதிகாரிகளையும் தற்போதைய அரசாங்கம் உயர் பதவிகளில் நியமித்திருப்பதை நாமல் ராஜபக்ச கடுமையாக விமர்சித்தார்.



