நல்லூர் ஆலயத்தில் நூதன திருட்டு! ஒருவர் கைது
நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் இன்றைய தினம் (24) கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை ஆலயத்திற்குள் கடமையிலிருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வங்கி அட்டையை திருடி ஆடைகள் கொள்வனவு
பக்தர்களிடம் நூதனமாக திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு கமராவின் உதவியுடன்
குறித்த நபரை கைது செய்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 15 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
