வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோட்டாபயவின் சதி.. மாவீரர் நினைவேந்தலில் சீமான் சீற்றம்!
அன்று போராட்டக்காரர்களை வெள்ளைக்கொடியுடன் சரணடைய கூறிய கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதிகள், அவர்களை கொலை செய்ய அனுமதித்தது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் காரைக்குடியில், இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "போர்க்காலத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதிகள் கூறினர்.
கொல்லப்பட்ட ஈழத்தமிழர்கள்
அதன்படி, வெள்ளைக்கொடியுடன் சென்று 300 பேர் சரணடைந்தனர். வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களை கொலை செய்ய கூடாது என்பது சர்வதேச போர் மரபு.

ஆனாலும், அவர்களை எப்படி கொலை செய்தீர்கள்? ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.
முள்ளிவாய்க்காலில் இருந்து எல்லோரும் வாருங்கள், நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என அழைத்தவர்கள் சிங்கள இராணுவத்தினர்.
சரணடைந்த 10,000இற்கும் மேற்பட்டோர் இப்போது எங்கே போனார்கள், அவர்கள் கொல்லப்பட்ட போது சர்வதேசத்திலும் இருந்தும் எவரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?” என்றார்.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா? Cineulagam