ஈழத்திற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்
தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
நினைவேந்தல்
குறித்த பதிவில், "மன உறுதியுடன் போர்க்களத்தில் அணிவகுத்துச் சென்ற வீரமிக்க வீரர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.

தியாகச் சுடர்களின் நினைவைப் போற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம்!
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்!
போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும் மரியாதை செலுத்தும் வகையிலும் அவர் இந்த பதிவை இட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |