N JOY" தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் - பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு
‘N JOY’ என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணையில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதியல் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் போது அதில் புற்றுநோய் ஏற்படுத்தும் எப்லடொக்ஸின் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மேலும் சில ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் அந்த தேங்காய் எண்ணையில் எப்லடொக்ஸின் உள்ளமை உறுதியாகியுள்ளது.
அதற்கமைய இந்த பெயரின் கீழ் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யும் மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரி சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த நிறுவனத்தின் கிரான்ட்பாஸ் களஞ்சிய அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.