ரவூப் ஹக்கீமிடம் பிமல் ரத்நாயக்க முன்வைத்துள்ள கோரிக்கை
அண்மையில் படகு மூலம் இலங்கைக்கு வந்த ரோஹிங்கியா ஏதிலிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க¸ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அரசாங்கம் இந்த விடயத்தை மனிதாபிமான முறையில் கையாளும் என்று கூறினார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
ஏதிலிகள், மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த மக்கள் இரக்கத்துடனும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளும் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும்.
எனவே, இந்த சூழ்நிலையை அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்ல. தேசிய மக்கள் சக்தியே இப்போது இலங்கையில் முஸ்லிம்களிடையே பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ளது என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |