மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள்: பிரித்தானியாவில் பேரணி
பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்டுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய இன்று 15 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதமொன்றினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள்.
அரசியல் தீர்வு
தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி ஆரம்பமான நீதிக்கான போராட்டமானது பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் முன்பாக சென்று பிரதமர் வதிவிடம் வரை சென்றுள்ளது.
நினைவு நாள் நிகழ்வின் பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலை பண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர் அனுரா ஏற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் பாப்ரா ராஜன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறைப்பொறுப்பாளர் நியூட்டன் ஏற்றிவைத்தார்.
மேலும், மாவீரர் சுடர்த்தமிழின் தாயார் ரஞ்சினி பாலச்சந்திரன் நினைவு சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்தினை தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கமும் தீப வணக்கமும் இடம்பெற்றது.
மேலும், இங்கிலாந்து தமிழின பேராளர்களின் உணர்வெளுர்சி பேரணி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |