பொலிஸாரின் அநாகரீக அத்துமீறல் செயற்பாடு: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் பொலிஸாரின் அநாகரீக அத்துமீறல் செயற்பாடுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலானது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (18.05.2024 ) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் பொலிஸாரின் அத்துமீறல்
இதன்போது, நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸார் உட்புகுந்து அநாகரீகமாக செயற்பட்டதுடன் அத்துமீறல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கை பொலிஸாரின் அத்துமீறல் என்பது அண்மைக்காலங்களில் பெருமளவில் அதிகரித்திருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி அன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் அத்துமீறி பல்கலைக்கழக முதன்மை வளாகத்தினுள் நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் வளைவினை அகற்றிச் சென்றமையினையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமை
தமிழர் தாயகத்தில் கேள்விக்குள்ளாக்கும் நினைகூரும் உரிமை தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் முடிவற்றுத் தொடரும் இதுபோன்ற நினைவேந்தல்களை தடுக்கும் மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது அவதானிப்பினைச் செலுத்தியிருந்தது.
கிழக்குப் பல்கலையில் தமிழ் மாணவர்கள் தமது பெரும்பாண்மையினை இழந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்கும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்ச்சியானதும் தன்னெழுச்சியானதுமான செயற்பாடுகளை தடுக்கும் செயற்பாடுகளின் அங்கமே இதுபோன்ற விதிகளிற்குப் புறம்பான ஒடுக்குமுறைகளின் நோக்கமாகும்.
பொருத்தமான வழி
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் காத்திரமான முன்னோக்கிய பயணங்களிற்கு பிராந்தியத்தின் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் பக்கபலமாகத் திகழவேண்டும்
மேலும், “பல்கலைக்கழகத்தை சமூகத்தினுள்ளும் சமூகத்தை பல்கலைக்கழகத்தினுள் கொண்டு செல்வதுமே” பொருத்தமான வழியாகும் என்பதனைப் பதிவு செய்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
