ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஆபத்தான கண்ணிவெடிகளை இறக்கிய ஈரான்! அமெரிக்கா எச்சரிக்கை
உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ஆபத்தான கண்ணிவெடியை வைத்துள்ளமையினால் அமெரிக்கா பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கு வளைகுடா நாடுகளை நம்பியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை தாண்டிய இடத்தில் ஈரான் கண்ணி வெடிகளை வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
அமெரிக்கா எச்சரிக்கை
எனவே "ஈரான் இதுவரை இல்லாத அளவில் கண்ணிவெடிகளை ஹார்முஸ் நீரிணையில் வைத்திருக்கிறது. இது தவிர ஈரானிடம் 2000-6000 வரை நவீன ரக கண்ணி வெடிகள் இருக்கலாம்.

எனவே ஹார்முஸ் நீரிணை என்பது மரண பள்ளத்தாக்காக மாறியிருக்கிறது. ஒரு சொட்டு கச்சா எண்ணெய்யை கூட இந்த வழியாக வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில், "ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை உடனே அகற்ற வேண்டும். இல்லை எனில், ஈரான் இதுவரை பார்க்காத இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan