ஈரானின் புதிய உச்ச தலைவரின் பாதுகாப்பு! மத்திய கிழக்கிலிருந்து வெளியான தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் அவர் “பாதுகாப்பாக இருக்கிறார்” என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனின் மகன் தெரிவித்துள்ளார்.
யூசெப் பெஷேஷ்கியான் சமூக ஊடகமொன்றில் வெளியிட்ட பதிவில், உச்ச தலைவர் காயமடைந்ததாக சில தகவல்களை தாம் கேட்டதாக கூறியுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர்
“இதுகுறித்து தொடர்புடையவர்களுடன் இணைப்புள்ள சில நண்பர்களிடம் நான் கேட்டேன். அவர்கள் ‘இறைவனின் அருளால் அவர் பாதுகாப்பாக உள்ளார், எந்த பிரச்சினையும் இல்லை’ என்று தெரிவித்தனர்,” என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, மொஜ்தபா கமேனி உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும், பொதுமக்கள் முன்னிலும் தோன்றவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
போர் பதற்றங்களின் மத்தியில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி! வட கொரியா கடும் எச்சரிக்கை
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam