பிரித்தானியா - உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது.
நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.
நேற்று மாலை 5.15 மணி அளவில் நினைவேந்தலில் முன்றலில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமானது.
அதனைத்தொடர்ந்து பிரித்தானிய கொடியினை திரு ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை சதா ஏற்றி வைத்தார்.
இறுதி கட்ட போர்
அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவோசை ஒலிக்க பிரதான நினைவுச்சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது தந்தையை இழந்த தமிழீழ பாதுகாப்பு துணை பொறுப்பாளர் மாதவன் மாஸ்ரரின் மகன் கோகுலன் சிவசிதம்பரம் ஏற்றி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக அங்கே இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையில் இருந்து இனப்படுகொலையின் சாட்சியான முகிலினி தனது உணர்வுகளை அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுவனான ஆதிசன் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை உரையாக தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து இளையோரான சௌமிகா புஷ்பராஜா ஆங்கிலத்தில் தன் உணர்வுகளை வெளி கொணர்ந்தார். மேலும், விழியரசி முள்ளிவாய்க்கால் இனவழிப்பு உரையினை வழங்கினார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
தொடர்ந்து தொழிற் கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க சம நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்கால் வலி சுமந்த நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
