பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவின் தெற்கு கடலோர நகரத்தில் (Southend on Sea) வாழும் தமிழர்கள் 15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (17.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
நினைவேந்தல் நிகழ்வு
ஷூபரி கிழக்கு (Shoebury East) கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு , நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள் பலரே பங்கேற்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில்,
“15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது.

மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri