முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி முதல் வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று (16.05.2024) நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்துள்ளதுடன், மன்னார் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனி
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இடம்பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மன்னாரை தொடர்ந்து வாகன பவனியானது இன்று (16) வவுனியாவை சென்றடைந்து அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |