முல்லைத்தீவில் மணலால் நிரம்பிய வீதி: சிரமத்தில் மக்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) - அளம்பில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு செல்லும் பிரதான வீதி மழை நீரினால் அரிக்கப்பட்டு மணலால் நிரம்பியுள்ளதால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிரவல் வீதியாக இருந்த இந்த பாதையானது, மழை நீரினால் அரிக்கப்பட்டதால் வீதியின் நடுப்பகுதியில் மணலும் இரு பக்கங்களிலும் கிரவலும் காணப்படுகின்றது.
அது மாத்திரமன்றி, அவ் வீதியின் நடுப்பகுதி பாரிய பள்ளமாக இருப்பதால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பாதையை பயன்படுத்தி வரும் பாடசாலை மாணவர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
சேதமடைந்துள்ள பகுதி
அதேவேளை, கிட்டத்தட்ட பாதையின் 150 மீற்றர் நீளமான பகுதி சேதமடைந்து மணல் மேடாக உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், பாடசாலைக்கு அண்மையில் உள்ள 30 மீற்றர் அளவிலான பாதை கொங்கிரீற்றினால் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த குறிப்பிட்ட பகுதி போன்றே இந்த பாதை முழுவதும் கொங்கிரீற்று பாதையாக அமைக்கப்பட்டிருந்தால் இவ்வகையான இடர்களை சந்தித்திருக்க முடியாது என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |