அரசாங்கத்தின் சூழ்ச்சி வெளிப்பட்டதால் கோபமடையும் பிமல் : சுமந்திரன் சாடல்

M A Sumanthiran Northern Province of Sri Lanka Bimal Rathnayake
By Rukshy Jul 04, 2025 03:50 AM GMT
Report

அரசாங்கத்தினால் அபகரிக்கப்படவிருந்த நிலங்கள் எமது நடவடிக்கைகளின் விளைவாகவே பாதுகாக்கப்பட்டது என்பதை உறுதிசெய்த அமைச்சருக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ள சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவர்களது சூழ்ச்சி வெளிப்பட்டமையினால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோபமடைவது இயல்பான விடயமேயாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

காணிகளைக் கையகப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய இவ்வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுகுறித்த விசாரணைகளை அடுத்து அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது.

அரசாங்கத்தின் சூழ்ச்சி வெளிப்பட்டதால் கோபமடையும் பிமல் : சுமந்திரன் சாடல் | Bimal Angry Govt Conspiracy Sumanthiran Publicly

அதனையடுத்து அரசாங்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானியின் ஊடாக மேற்குறிப்பிட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி நிறுத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுமந்திரன் போன்றோர் ரணில் விக்ரமசிங்கவுடன் பணியாற்றியமையினால் அவர்கள் தம்மையும் ரணிலைப் போன்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.

அபகரிக்கப்படவிருந்த நிலங்கள்

அத்தோடு காணி உரித்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியல் மற்றும் இனவாத அடிப்படையிலான கருத்துக்களின் விளைவாக இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்திருக்கும் பதிவின் ஊடாகப் பதிலளித்துள்ள சுமந்திரன், 'அவர்கள் எதனை வேண்டுமானாலும் கூறட்டும். தமது சூழ்ச்சி வெளிப்பட்டமையினால் அமைச்சர் கோபமடைவது இயல்பான விடயமேயாகும்' என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அபகரிக்கப்படவிருந்த நிலங்கள் எமது நடவடிக்கைகளின் விளைவாக பாதுகாக்கப்பட்டமையை உறுதிசெய்த அமைச்சருக்கு எமது நன்றிகள்.

இவ்விடயத்தில் தொடர்ந்தும் அவதானமாகவே இருப்போம் என்றும் சுமந்திரன் பதிவிட்டுள்ளார். 

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் உட்பட 3 பேர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் உட்பட 3 பேர் விமான நிலையத்தில் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US