தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு: ஈழத் தமிழர்களுக்கான காய் நகர்த்தல் தொடர்பான திட்டம்
சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலையின் முதல்வர் முருகவேள் தெரிவித்துள்ளார்.
“அகளகம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் முருகவேள், வெளிநாடுகளில் தமிழ் மாணவர்களுக்காக விசேட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயணங்களின் போது தமிழ்நாடு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, ஈழத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அவரது முழுமையான கருத்துக்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.