அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு
நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை
இதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO..
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri