எரிபொருள் கொள்முதல் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் 92 யு.என்.எல் (Petrol Octane 92 - UNL),மர்பான் வகை கச்சா எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S.) ஆகியவற்றை நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து, வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி கொள்முதல் நடைமுறையின்படி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிலைக்கொள்முதல் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, குறைந்த விலைக்கு ஏலம் கோரியவர்களுக்கு உரிய கொள்முதல்களை வழங்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri