மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இரட்டிப்பாகும் கொடுப்பனவு - 2027 ஏப்ரல் முதல் நடைமுறையில்
2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுவரும் மாணவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாளாந்தக் கொடுப்பனவு
மேலும் தெரிவித்த அவர், மேலும்,
பிரிவேனா கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பிக்குமார்களுக்கான நாளாந்தக் கொடுப்பனவு 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
தகைமையுடைய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக வட்டியில்லாக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி தொடர்ந்து வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு 6,250 ரூபாவிலிருந்து 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri