சுங்கத் திணைக்களத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் ( Customs Department) பொது மக்களை அறிவறுத்தியுள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட (Seevali Arukgoda) தெரிவித்துள்ளார்.
போட்டிப் பரீட்சை
அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே பணிக்கு அமர்த்தப்படுவர் எனவும் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan

ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
