பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
பப்புவா நியூ கினியாவில் (New Guinea) ஏற்பட்ட பாரிய மண்சரிவில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, ஐக்கிய நாடுகள் சபை (UN)வெளியிட்டுள்ள அறிக்கையில் 640 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தென் பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் (New Guinea) ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சுமார் 670இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் (UN) சபையின் அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக் (Serhan Aktoprak) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போது 150இற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
இந்நிலையில், 670இற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதேவேளை, குறித்த பகுதியில் தண்ணீர் வழிந்தோடுவதுடன் நிலம் சரிவது தொடர்வதனாலும் பாரிய ஆபத்து ஏற்படலாம்.
மேலும், இந்த கிராமத்திலிருந்து 1,000இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, அப் பகுதியிலுள்ள உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |