சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணை

Independent Writer
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதை தவிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க (Gamini B.Dissanayake) தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி குறித்த விசாரணை தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரின் அடையாள அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதான நீதவானின் உத்தரவு
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) வழங்கிய உத்தரவுக்கமைய இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மேற்படி வழக்கு, சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
கடந்த வாரம் 2 நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையால் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW