மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக இளைஞன்
2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் மத்திய மலை நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டியானது கொழும்பு, தெஹிவளையில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நுவரெலியா மாவட்டத்தின், நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த (31) வயதுடைய உதயகுமார் ஷங்கர் கணேஷ் என்ற இளைஞனே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
80 kg எடைப்பிரிவு
குறித்த போட்டியில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டு அனைவரும் தங்களது உடல் கட்டமைப்புகளை முன்னிலை படுத்தியுள்ளனர்.
இதில் MEN PHYSIQUE மற்றும் 80 kg எடைப்பிரிவிற்கான "பாடி பில்டிங்" ஆகிய பிரிவுகளில் உதயகுமார் சங்கர் கணேஷ் சாதனை படைத்துள்ளார்.
தற்போது இவர் நுவரெலியா பிரதான நகரத்தில் THE IRON KINGDOM உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிவிப்பாளராக கடமையாற்றி வருவதுடன் சிறுவயது முதலே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடற்கட்டமைப்பு பயிற்சிகள் மூலம் இன்றுவரை பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான சாதனைகளை படைத்துள்ளதுடன் ஆணழகன் போட்டியில் இவர் பல பரிசில்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
