ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து, ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன முறையே தொடர்ச்சியாக பயணித்துள்ளது.
ஹயஸ் வாகனம்
ஒரு கட்டத்தில் ஹயஸ் வாகன சாரதி பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த வாகனத்தால் சடுதியாக ஹயஸ் வானை திருப்ப முற்பட்ட போது பேருந்து பின்பகுதியுடன் ஹயஸ் வாகனம் மோதியுள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்துக்கு பின்னால் வந்த டிப்பரும் ஹயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து காரணமாக ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் , பேருந்தின் பின்பகுதி, டிப்பரின் முன்பகுதி என்பன சிறியளவில் சேதமடைந்துள்ளது.
விபத்தின் போது ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத நிலையில் ஹயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
