ரணிலின் பாரியாருக்கு சார்பாக அணிதிரளும் அறிஞர்கள்
ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, கணவரின் வழக்கு தொடர்பில் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிஞர்கள் குழு ஒன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விசாரணைகள் என்ற பெயரில் சுயாதீன அறிஞர்கள் தேவையற்ற விதத்தில் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தேவையற்ற துன்புறுத்தல்கள்
இந்த கூட்டறிக்கையில் தேசமான்ய ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி சுபாங்கீ பத்திரன உவர்த், எஸ். ரேணு பத்திரன ஹேரத், பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் சார்பில், பெண் உரிமைகள் தொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கையொப்பமிடப்பட்டு குறித்த அறி்ககை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.
மேலும் விசாரணை நடவடிக்கைகளிக் பொது தேவையற்ற துன்புறுத்தல், மிரட்டல் அல்லது ஒரு சுயாதீன கல்வியியலாளரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.