நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது! தர்மப்பிரிய திசாநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது என தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பணி
இந்த வாகனம், எவ்வாறான வாகனம் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை முன்னெடுப்பதற்கு வாகனங்கள் மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன வாகனமொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரிய செலவு
பழைய வாகனங்களில் உதிரிப் பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை பழுதுபார்ப்பது பாரிய செலவினை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அரச வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? Manithan