துரிதப்படுத்தப்பட வேண்டிய மீட்பு பணி.. சர்வதேச உதவிகளை அணுகுமாறு ஹக்கீம் கோரிக்கை

Rauf Hakeem Sri Lankan Peoples Floods In Sri Lanka Flood Cyclone Ditwah
By DHUSHI Dec 21, 2025 11:05 AM GMT
Report

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் நிரந்தரமான முடிவு வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகையொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான புதிய கருவிகள்

இலங்கை பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான புதிய கருவிகள்

மக்களின் துயர நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க உட்பட அனைவரையும் ஒரு மேசைக்கு அழைத்து, சர்வதேசத்திற்கு ஒரு தேசிய வேண்டுகோளை விடுக்க வேண்டும். அதன் பின்னர் பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் போன்றோரை வைத்து ஒரு சபையாக அமைத்து, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் ஒரு 'நீட்ஸ் அசெஸ்மென்ட்' செய்து, அவசர, இடைக்கால மற்றும்  நீண்டகால உதவிகள் குறித்த பட்டியலைத் தயாரித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

துரிதப்படுத்தப்பட வேண்டிய மீட்பு பணி.. சர்வதேச உதவிகளை அணுகுமாறு ஹக்கீம் கோரிக்கை | Mp Rauff Hakeem About Ditwa Damage Recovery

மக்கள் தற்போது முழுமையாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மக்கள் துப்புரவுப் பணிக்காக மட்டுமே மீளத்திரும்பியுள்ளனரே தவிர, அங்கு நிரந்தரமாகக் குடியேற முடியாத நிலைமையே உள்ளது. துப்புரவு மற்றும் சுகாதாரப் பிரச்சினை முக்கியமானது.

வீடுகளைத் துப்புரவு செய்தல் மற்றும் வியாபார நிறுவனங்களை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வருதல் ஆகியவை ஒருபுறம் இருக்கையில்,  வீதியோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அந்தப் பிரதேசங்கள் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது அவசியம்.

குப்பைகளை அகற்றி, வீதிகளைச் சுத்தப்படுத்தி, போக்குவரத்தை சீர்படுத்துவதே இப்போது அவசியம். அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆளணி பற்றாக்குறை மிக முக்கிய பிரச்சினை. கிராம மட்டத்தில் ஆளணியில் வெற்றிடங்கள் உள்ளன. அனர்த்த மத்திய நிலையத்திலும் (NPR) நிறுவனத்திலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

துரிதப்படுத்தப்பட வேண்டிய மீட்பு பணி.. சர்வதேச உதவிகளை அணுகுமாறு ஹக்கீம் கோரிக்கை | Mp Rauff Hakeem About Ditwa Damage Recovery

உள்ளூராட்சி சபைகளில், பயன்படாமல் இருக்கும் கனரக வாகனங்களை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான அனர்த்தங்களின்போது, எல்லாவற்றுக்கும் சில சட்டங்களை அழுத்தப்படுத்தாமல், மனிதாபிமானத்துடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் அணுகி, நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

நிவாரண பணிகளின் தீவிரம்

அனர்த்த நிவாரணப் பணிகளில் அரசியல் செய்வதை நான் சற்றும் விரும்பவில்லை. இந்த அனர்த்தம் ஒரு தேசியப் பிரச்சினை, இதில் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை. எதிர்க்கட்சித் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. நாங்கள் வெளிப்படையாக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.

உதாரணமாக, அரசாங்கம் உள்நாட்டில் நிதி திரட்ட கொண்டுவந்த குறைநிரப்புப் பிரேரணைக்கு (supplementary estimate) உடனடியாக ஆதரவு தருவதாகச் சொன்னோம். அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் வந்து எங்களுடன் ஒத்துழைக்கிறார்கள். எனவே, எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம்.

துரிதப்படுத்தப்பட வேண்டிய மீட்பு பணி.. சர்வதேச உதவிகளை அணுகுமாறு ஹக்கீம் கோரிக்கை | Mp Rauff Hakeem About Ditwa Damage Recovery

ஆனபோதிலும், சாதாரண மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது சில விமர்சனங்கள் வரும். இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அரச தலைமைகளுக்கு வர வேண்டும். அரசியல் விமர்சனங்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும்,  தேசிய சபை அமைப்பது குறித்த தவறான புரிதல் உள்ளது. நான் வலியுறுத்தியது, அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலைமையைப் பிரகடனப்படுத்துதல் என்பதே. இது அவசர திருத்தங்களைச் செய்வதற்கும், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்யக்கூடிய விடயங்களுக்கு ஓர் அதிகாரத்தை அரசாங்கத்திற்குத் தற்காலிகமாக வழங்குவதற்கும் உதவும். இது அவசரமாகச் செய்யப்பட வேண்டிய சட்டரீதியான கடமை.

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் (IMF) கடன் மீளச்செலுத்துவதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிற்போடுமாறு ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் கோர விபத்து - இருவர் பலி: 5 பேர் வைத்தியசாலையில்

அனுராதபுரம் பகுதியில் கோர விபத்து - இருவர் பலி: 5 பேர் வைத்தியசாலையில்

நிலச்சரிவில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

நிலச்சரிவில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US