மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து! இருவர் பலி: மேலும் சிலர் வைத்தியசாலையில்
அனுராதபுரம் - பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை ( 21) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு விபத்தில் சிக்கிய ஒருவரை கல்கமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்
இதன்போது கல்கமுவ வைத்தியசாலை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி, அனுராதபுரம் நோக்கிச்சென்ற டிமோ பட்டா லொரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது லொறியின் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் லொறியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டியின் சாரதியும், வாகனத்தில் பயணித்த பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 58 வயதுடைய தாயும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் ஐந்து பேரும், லொறியில் மூன்று பேரும் பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அனைவரும் கல்கமுவ அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan