யாழ்ப்பாண நூலக எரிப்பிற்கு நீதியான விசாரணை வேண்டும்! இளங்குமரன்
யாழ்ப்பாண (Jaffna)நூலக எரிப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பட்டலந்த வதை முகாம் போலவே வடபகுதியிலும்,பல சித்திரவதை முகாம்கள் முன்னர் இருந்த நிலையில் பல தமிழ் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர் என
“இலங்கையில் எங்கு பார்த்தாலும் மனித புதைக்குழிகள் தான் உள்ளன. வட மாகாணத்தில் உள்ளவர் ஆயுத போராட்டத்திற்கு தள்ளப்பட்டதற்கு காரணமே ரணில் விக்ரமசிங்க தான்.
1983 கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழ் மக்களுக்கு வாக்கின் மீதிருந்த நம்பிக்கையின்மை சீரழிக்க வைத்ததும் ரணில் விக்ரமசிங்க தான்” என குறிப்பிட்டுள்ளார்.
