தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான மாணவர்
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு(19.05.2026) இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான தகவல்
விபத்தில் உயிரிழந்தவர் மூதூர் -ஆணைச்சேனை பகுதியைச் சேர்ந்த றிஸ்வான் சிப்கி எனும் 19 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞரும் காயமடைந்துள்ளார்.

இரண்டு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக் சென்று, மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

Tamizha Tamizha: அரங்கத்தில் இளம்பெண் வடித்த கண்ணீர்... அப்பாவின் கடைசி முகத்தை கூட பார்க்கலையே Manithan