விளையாட்டு அமைச்சு மற்றும் குத்துச்சண்டை சம்மேளன மோதல்! சர்வதேச போட்டிக்கான வாய்ப்பு இழப்பு
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் குத்துச் சண்டை சம்மேளனம் என்பவற்றுக்கு இடையில் நிலவும் மோதலின் பிரதிபலனாக ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.
இலங்கை விளையாட்டுத் துறை நிர்வாக ரீதியாக முற்றிலும் சரிந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவிருந்த ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற நான்கு விளையாட்டு வீரர்கள், சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, தென் கொரியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை ரக்பி அணிக்கு விசா கிடைக்காததால் ஏற்பட்ட சர்வதேச அவமானம், குத்துச்சண்டை சங்கத்திற்கும் விளையாட்டு அமைச்சிற்கும் இடையே தொடரும் மோதல் காரணமாக மீண்டும் சர்வதேச அரங்கில் எதிரொலித்துள்ளது.
பயணத்துக்கான ஏற்பாடு
ஜகார்த்தா சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஆண் வீரர்களுக்கும் ஒரு பெண் வீராங்கனைக்கும் இந்த அநீதி நிகழ்ந்துள்ளது.

அதற்காக குறித்த நான்கு பேரும் பல்வேறு பட்ட தனிப்பட்ட தியாகங்கள் மூலமாக பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்த இளம் வீரர்கள் தங்களின் விசுவாசமான நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டியிருந்தனர்.
அரசாங்க அனுமதி
இருப்பினும், குத்துச்சண்டை சங்கத்திற்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையே ஏற்பட்ட நிர்வாக நெருக்கடியின் காரணமாக, இந்தப் பயணத்திற்குத் தேவையான இறுதி அரசாங்க அனுமதியை (அமைச்சு அனுமதி) வழங்காமல் இருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் விளைவாக, நாட்டிற்காக முதன்முறையாக சர்வதேச அரங்கில் நுழையவிருந்த இளம் வீரர்களின் கனவுகள் அதிகார மோதலின் முன் கலைந்து போயுள்ளது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri