ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி நகர சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த நகர சபை உறுப்பினர், காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துர்நடத்தை செய்ய முயற்சித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைகளுக்காக குறித்த நகர சபை உறுப்பினரை அழைத்த காத்தான்குடி பொலிஸார், ஆரம்ப விசாரணைகளின் பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan