சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மட்டுமே வழங்கப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையின் சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மாத்திரை மட்டுமே வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நான் யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும்போது என் கண்முன்னே மூன்று கைதிகள் உயிரிழந்தனர்.
மருந்துகள் இல்லை
சிறைச்சாலையில் எல்லா நோய்க்கும் பனடோல் மாத்திரமே வழங்கப்படுகின்றது.

அதை தவிரே வேறு மருந்துகள் இல்லை. அதேபோல் சிறைச்சாலையில் மருத்துவர்கள் எவரும் இருப்பதில்லை.
மாரடைப்பு ஏற்பட்டால் கூட அவசர சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் கடமையில் இப்பதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்தும் குற்றம்சாட்டியுள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri