ஜனாதிபதியின் பிரான்ஸ் பயணம் ரத்து..!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த மாத நடுப்பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ பயணம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரான்ஸ் பயணம் இம்மாதம் 15 முதல் 18 ஆம் திகதிக்குள் நடைபெறவிருந்தது.
இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன இந்தப் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன.
பயணம் ரத்து
பின்னர், இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்பவற்றின் அறிக்கையின் பிரகாரம், பிரெஞ்சு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காகவே இந்தப் பயணம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்தப் பயணத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு ஒன்று மேற்கொள்ளப்படவிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர், அந்த சந்திப்பு இனி இரகசியமாக இருக்காது என்பதால், இந்த நேரத்தில் அரசாங்கத்துக்கு ஆபத்தான எந்தவொரு நகர்வையும் எடுக்கக்கூடாது என்று ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் முடிவு செய்த பின்னர் பிரான்ஸ் பயணம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது பிரெஞ்சு அமைச்சர் மற்றும் அந்நாட்டின் வணிக நிறுவனங்களுடனான சந்திப்புகளும் திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அவையும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 10 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan