இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்..! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது, கைதிகள் சிறைச்சாலை வாசலை உடைத்து தப்பிச் செல்வதைத் தடுக்க எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, சம்பவத்தில் தொடர்புடைய சில கைதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"வெளியில் எங்கு பார்த்தாலும் உன்னை உயிருடன் விடமாட்டோம்" என அந்த அதிகாரியை நோக்கி மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை கலவரம்
குறித்த அதிகாரி டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், அவசர சூழ்நிலையை முன்னிட்டு கடமைக்கு திரும்பி தனது பொறுப்பை நிறைவேற்றியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், இந்தக் கலவரத்தை முன்னின்று வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்', தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் மற்ற கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அச்சுறுத்தல்
தாக்குதலால் அவருக்கு நடப்பதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், கட்டுவெல்லேகம சுரேஷ் உள்ளிட்ட 13 பேர் இணைந்து இந்தக் கலவரத்தை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் குழுவில் 'ரொக்கி' என அழைக்கப்படும் கைதியும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலவரத்தின் போது முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படும் ரொக்கி, பின்னர் தன்னை சம்பவத்துடன் தொடர்பில்லாதவர் போல காட்டிக்கொண்டு, சிறை அதிகாரிகளுடன் இணைந்து கைதிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்கள்
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 13 பேரும் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயன்படுத்தப்பட்ட 22 ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளும், 10 T-56 ரக துப்பாக்கிகளும் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறைச்சாலையில் உள்ள ஏனைய ஆயுதங்களும் பரிசோதனைக்காக CID பொறுப்பில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சம்பவத்தின் போது காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, பின்னர் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam