பிறந்தநாளில் சாக்லேட் கொடுத்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி - அதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு
தனது பிறந்த நாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மாணவியொருவர், பாடசாலை அதிபரால் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர் மீது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாளில் நடந்த மோசமான சம்பவம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பாடசாலை மாணவி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சக மாணவர்களுக்கு சாக்லேட் பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது மாணவி வசமிருந்த 18 சாக்லேட்டுகளையும் பாடசாலை அதிபர் அச்சுறுத்தி உண்ண வைத்ததாக கூறப்படும் நிலையில், மாணவி, தற்போதைக்கு சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும்15 வயது மாணவியொருவரே இதுபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி
மாணவியின் 15வது பிறந்தநாள் கடந்த 8ஆம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில், இதுபோன்று அதிபர் மோசமாக நடந்துக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவு காரணமாக கஹடருப்ப கிராமிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி, மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கஹடருப்ப பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam