சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசு தலையீடு ஜனநாயக விரோதம்..! சஜித் ஆவேசம்

Parliament of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Nov 07, 2026 08:31 AM GMT
Report

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கங்களை மாற்றுமாறு அரச தரப்பினால் விடுக்கப்படும் அழுத்தமானது, நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் சுயாதீனத்தில் மேற்கொள்ளும் தேவையற்ற மற்றும் அபாயகரமான தலையீடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிகாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06.11.2026) சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைத்து ஆற்றிய அவசர உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

5 எம்.பிக்கள் முன்வைத்த சிறப்புரிமைப் பிரச்சினை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் சானக மாதுகொட ஆகியோர் இன்று அவசியமான சிறப்புரிமைப் பிரச்சினைகளைச் சபையில் முன்வைத்துள்ளோம்.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது தன்னிச்சையாக நிராகரித்தமையே இதற்குக் பிரதான காரணமாகும்.

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசு தலையீடு ஜனநாயக விரோதம்..! சஜித் ஆவேசம் | Motion Against The Speaker

அரசமைப்பின் கீழ் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய கட்டமைப்புகளுக்கு இடையே அதிகாரச் சமநிலை பேணப்படுகின்றது. இதில் சபாநாயகர் அல்லது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைப்பது சட்டவாக்கத்துறையின் மிக முக்கியமான உரிமையாகும்.

இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்கும் உரிமையைப் போலவே, அதிலுள்ள உள்ளடக்கங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைத் தீர்மானிக்கும் முழுமையான உரிமையும் எதிர்க்கட்சிக்கே காணப்படுகின்றது.

அரசின் ஏவலாட்களா எதிர்க்கட்சி..!

அதனை விடுத்து, ஆளும் தரப்பு கூறும் உள்ளடக்கங்களை வைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி என்ன அரசின் ஏவலாட்களா? பிரேரணையின் உள்ளடக்கத்தில் தலையிட அரச தரப்புக்கு எந்தவொரு ஜனநாயக உரிமையும் கிடையாது. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 29 (1), (2) இன் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய எமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் உத்தியோகபூர்வமாகச் சேர்க்கப்பட்ட பின்னரும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிலுள்ள விடயங்களை மாற்றுமாறு அரசு வற்புறுத்துகின்றது.

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசு தலையீடு ஜனநாயக விரோதம்..! சஜித் ஆவேசம் | Motion Against The Speaker

பிரேரணையின் உள்ளடக்கத்தை மாற்றினால் மாத்திரமே விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம் எனக் கூறுவது நிறைவேற்றுத்துறையானது சட்டவாக்கத்துறையைத் தனது அதிகாரப் பலத்தால் அடக்கியாள முனையும் மோசமான செயற்பாடாகும்.

ஆகவே, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்த தீர்மானத்தை உடனடியாக மீளாய்வு செய்து, அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.      

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மாமனார் தோமஸ் மார்கல் கைது..!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மாமனார் தோமஸ் மார்கல் கைது..!

அதிகாலை வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம்! ஒருவர் வெட்டிக்கொலை: மனைவி மற்றும் மகள் படுகாயம்

அதிகாலை வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம்! ஒருவர் வெட்டிக்கொலை: மனைவி மற்றும் மகள் படுகாயம்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US