அதிகாலை வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம்! ஒருவர் வெட்டிக்கொலை: மனைவி மற்றும் மகள் படுகாயம்
குருணாகல் - வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் ஒருவர் இன்று (7) அதிகாலை கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் அவ்வீட்டின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சந்தேகநபர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தலைமறைவு
இந்த கொடூர தாக்குதலில் 56 வயதுடைய வீட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவியும் மகளும் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்ய வாரியப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.