பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண்! - அவுஸ்திரேலியாவில் சம்பவம்
அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைளுடன் தாய் ஒருவர் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
