பிள்ளையுடன் காத்திருந்த இளம் தாய்க்கு எமனாக வந்த பேருந்து - குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த துயரம்
நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பம் ஒன்று காயமடைந்துள்ளது.
மாவனெல்ல-ஹெம்மாதகம வீதியில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஓட்டுநர் தூங்கியதால் பாடசாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியது.
விபத்தில் பெண் பலி
மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த தாய், தந்தை மற்றும் பிள்ளையை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கியது. மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மதியம் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவரது மகள் மற்றும் மற்றொரு நபர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வேகமாகச் சென்று வீதியில் இருந்து விலகி நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீதும், அருகிலுள்ள கடையின் மீதும் மோதியது.
கடையில் இருந்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அவரின் ஆறு வயது மகள் காயமடைந்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri