இலங்கையர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள நற்சான்று
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நல்ல கல்வி கற்ற அவுஸ்திரேலிய சமூகத்துடன் இயல்பொத்து போகும் தன்மையுடையவர்கள் என பாராட்டப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா, அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீவ் கேம்பரை சந்தித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றும் அவுஸ்திரேலியா சமூகத்துடன் இணைந்துள்ளதாகவும் கேம்பர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்து மகிழ்ச்சி அளிப்பதாக உயர்ஸ்தானிகர் சிற்றாங்கனி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பர அடிப்படையில் நன்மை பெற்றுக் கொள்ளக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan